நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம்: மதுரை மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை அமல்

மதுரை:

மதுரை மாவட்ட திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் ஆர்ப்பாட்டத்திற்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

அனுமதி இல்லை என்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து அமைப்பினர் சூளுரைத்துள்ளனர். 

இதனிடையே, இந்து, முஸ்லிம் அமைப்புகள் திருப்பரங்குன்று மலை குறித்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். 

இதனால் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பினர் இடையே அசாதாரண சூழல் உருவாக வாய்ப்புள்ளதால் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset