
செய்திகள் மலேசியா
தமிழ் ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக குயில் ஜெயபக்தி நிறுவனம் வெளியிடும்
கோலாலம்பூர்:
மலேசிய திருநாட்டில் புதிய தமிழ் எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் எழுத்து துறையில் அதிக அளவில் முத்திரை பதிக்க வேண்டும்.
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் எழுத்து படைப்புகளை புத்தகமாக வெளியிட குயில் ஜெயபக்தி நிறுவனம் முன் வருகிறது.
ஆகவே தரமான படைப்புகளை படைக்க ஆசிரியர்கள் முன் வர வேண்டும் என்று டத்தோ கு. செல்வராஜ் கேட்டுக் கொண்டார்.
புத்தகம் எழுதினால் என்ன கிடைக்கும் என்று பாராமல் உங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள முன் வாருங்கள்.
வாசிக்கும் சமுதாயத்தை உருவாக்க முடிந்தால் புத்தக விற்பனையும் அதிகரிக்கும்.
நாளும் தெரிய நாளும் படிப்போம், வாசிப்பு நமது சுவாசிப்பு என்ற தாராக மந்திரத்தோடு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் குயில் ஜெயபக்தி நிறுவனம் இன்றும் தமிழுக்கு சேவையாற்றி வருகிறது.
எழுத்துத் துறையில் புதிய எழுத்தாளர்களாக உருவாகி இருக்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் புத்தக அறிமுக விழாவும் பாராட்டும் விழாவும் இன்று குயில் ஜெயபக்தி மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm