செய்திகள் சிந்தனைகள்
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
பலசாலியான, வலிமையான ஒருவர் பாதையில் நடந்து செல்வதை நபித்தோழர்கள் பார்த்தனர். அங்கு நபிகளாரும் இருந்தார்கள்.
தோழர்கள்: ”இவர் இறைப் பாதையில் (ஃபீ ஸபீலில்லாஹ்) இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?”
நபிகளார்: “இவர் தன் பிள்ளைகளுக்காக உழைக்கச் செல்கிறார் என்றால் இவரும் இறைப் பாதையில்தான் இருக்கிறார். வயதான பெற்றோரைப் போற்றுவதற்காக உழைக்கச் செல்கிறார் என்றால் இவரும் இறைப் பாதையில்தான் இருக்கிறார்”. (தபரானீ)
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் உழைத்தல் என்று நம்மில் பெரும்பாலோர் நம்புகின்றனர்.
அது மகத்தான பணிதான். ஆனால் அது மட்டுமே மகத்தான பணியல்ல.
ஹலாலான வழியினூடாக உழைக்கும் அனைத்தும் இறைப் பாதையில் உழைப்பதுதான்.
குடும்பத்தைப் போற்ற அன்றாடம் வீட்டை விட்டு வெளியே செல்லும் ஓர் ஆண் - செய்யும் தொழில் அனுமதிக்கப்பட்டதாக இருந்தால் - அவன் இறைப் பாதையில் உழைக்கிறான்.
வீட்டைப் பெருக்கி, சமைத்து, பிள்ளைகளைக் கவனித்து, ஆடை துவைத்து வீட்டை நிர்வகிக்கும் பெண் இறைப் பாதையில் உழைக்கிறாள்.
வயதான பெற்றோரை மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் இறைப் பாதையில் இருக்கிறார்.
நோயாளியை நலம் விசாரிப்பவர் இறைப் பாதையில் இருக்கிறார்.
ஆசிரியர், பொறியாளர், மருத்துவர், ஓட்டுனர்… எல்லோரும் இறைப் பாதையில் உழைப்பவர்கள்தான்.
மைக் பிடித்து பயான் பண்ணுவது, பெட்டி படுக்கையுடன் ஊர் ஊராகச் சுற்றுவது, மத்ரஸாவில் ஓதிக் கொடுப்பது, பள்ளியில் தொழ வைப்பது…
இவை மட்டுமே இறைப் பாதையில் உழைக்கும் உன்னதப் பணி என்பது தவறான கற்பிதம்.
செய்யும் பணிஅனுமதிக்கப்பட்டதாக இருந்தால் அந்தப் பணியின் மூலமாகவும் சொர்க்கம் செல்லலாம்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
January 24, 2025, 7:22 am
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
January 10, 2025, 8:40 am
நளினமான வார்த்தைகள் - வெள்ளிச் சிந்தனை
January 3, 2025, 9:27 am
7 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பார்கள்! ஆனால்..! வெள்ளிச் சிந்தனை
December 27, 2024, 8:05 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 25, 2024, 11:03 pm
"இறைவனிடம் கையேந்துங்கள்..” மனிதநேயக் குரலுக்கு நூற்றாண்டு! நாகூர் ஹனீபா பிறந்த நாள்!
December 20, 2024, 9:22 am
கவலைகள், தோல்விகள் ஏற்பட்டால் உங்களை நீங்களே மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 13, 2024, 7:47 am
நீங்கள் நீங்களாக இருங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 11, 2024, 6:49 pm