செய்திகள் மலேசியா
பிரதமர் 250,000.00 ரிங்கிட் மானியம்: சீரமைக்கப்பட்ட தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு சமயப்புர மகா மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் திறப்பு விழா கண்டது
ஈப்போ:
இங்குள்ள தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு சமயபுர மகா மாரியம்மன் கோவிலின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட திருமண மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க அழைப்பு வழங்கிய ஆலய நிர்வாகத்திற்கு பிரதமரின் நன்றியை கூறினார் தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் சிறப்பு மேலதிகாரி ஆர்.சுரேஸ் குமார்.
கடந்த 1972 ல் உருவாக்கப்பட்ட இந்த திருமண மண்டபம் பல வரலாற்றுப் பதிவுகளை கொண்டுள்ளது. இம்மண்டபத்தின் நிலைப்பாடு குறித்து ஆலயத்தலைவர் முருகையா மற்றும் அவர் தம் நிர்வாகத்தினர் தெளிவான விளக்கமளித்தனர். இம்மண்டபம் பழுதடைந்து விட்டதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் பின், இவ்விவகாரம் பிரதமரின் பார்வைக்கு கவனத்திற்கு கொண்டு சென்று இம் மண்டபத்தை மறுசீரமைப்பு செய்ய 250,000.00 ரிங்கிட் மானியமாக கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து இம்மண்டப சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டதாக அவர்குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களில் இம்மண்டத்தின் வாயிலாக இவ்வாலய நேர்வாகத்தினர் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்ள முடியும். இவ்வட்டாரத்தில் இந்த ஆலய மண்டபத்தை இங்குள்ள இந்தியர்கள் பயன்படுத்திக்கொள ள ஏதுவாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த தம்புன் நாடாளுமன்ற ்தொகுதியில் ஆலயங்கள் மற்றும் ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்கு வற்றாத உதவிகள் பிரதமர் தரப்பினர் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். குறிப்பாக, தம்புன் தொகுதியிலுள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாக வழங்க நாடாளுமன்ற தொகுதி தரப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்று அவர் கருத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் கிளேபாங்கில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் முதல் கட்டமாக 600 மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்திற்கு மாணவர்களின் தேவைக்கு ஏற்ப உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த திருமண மண்டபம் மழை காலங்களில் சேதமடைச்த கூரையினால் மழை நீர் ஒழுக தொடங்கியது. இதனால் பல சவால்களையும் அசெளகரியங்களும் எதிர்நோக்கினோம். அதன் பின் இவ்வாலயத்தின் முன்னாள் தலைவர் குணசேகரனின் புதல்வர் டாக்டர் இந்திரன் சேனா இம்மண்டபத்திற்கு நேரடியாக வருகையளித்து மண்ட கூரையை மாற்றுவதற்கு 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவியாக ஆலயத் தலைவர் முருகையா சுப்பிரமணியம் கூறினார். இவ்வேளையில் அக்குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 5:21 pm
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 17, 2025, 5:14 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அப்துல் ஹமித்
December 17, 2025, 1:49 pm
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
