நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாடாளுமன்ற வக்ஃபு கூட்டுக் குழுவின் 10 எம்பிகள் இடைநீக்கம் ஒரு ஜனநாயக படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை:

இன்று நடைபெற்ற வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆ. ராசா, கல்யாண் பானர்ஜி, முஹம்மது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன்,மொஹிபுல்லா, முஹம்மது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு ஜனநாயக படுகொலை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வஃக்பு சட்டத்திருத்த மசோதாவின் கூட்டுக் குழு, இரண்டு அவைகளிலும் சேர்த்துமொத்தம் 31 உறுப்பினர்களுடன் அமைக்கப்பட்டது. மக்களவைக்கு 21 மற்றும் மாநிலங்களவைக்கு 10 உறுப்பினர்கள் இடம் இடம்பெற்றனர்.

கூட்டுக்குழுவின் 31 உறுப்பினர் களில் பாஜக 11, அதன் கூட்டணிகள் 5 என 16 எம் பிக்கள் உள்ளனர். நியமன எம்பிக்கள் 2 என அரசுக்கு ஆதரவாக மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

கூட்டுக்குழு நாடு முழுவதும் பயணம் செய்து பல தரப்பினருடமிருந்தும் ஆலோசனைகளை பெற்றது. இவற்றை  ஆய்வு செய்ய தங்களுக்குபோதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று  எதிர்க்கட்சி எம்.பிக்கள் குரல் எழுப்பிய நிலையில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 

டில்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அரசியல் ஆதாயம் கருதி வக்பு திருத்தச் சட்டம் மசோதாவை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முயன்று வருவது தெளிவாகிறது. 

சிறுபான்மையினர்கள் உரிமையைப் பறிப்பதிலும் சிறுபான்மையினர் நலனில் அக்கறைகொண்டு செயலாற்றுபவர்களை ஒடுக்குவதிலும் ஒன்றிய அரசு முதன்மையாகச் செயல்படுகிறது. 

நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சியின்சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று
பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset