நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை அமைச்சர்களுக்கு அதிசொகுசு இல்லங்கள் வழங்குவது  நிறுத்தப்படும்: நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன 

கொழும்பு:

இலங்கை அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக உத்தியோகபூர்வ இல்லங்களாக அமைச்சுக்களின் கீழுள்ள 20 இல்லங்கள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 பங்களாக்கள் தொடர்பிலும் மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட பயனுள்ள செயற்பாடுகளுக்காக குறித்த இல்லங்களை பயன்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset