செய்திகள் உலகம்
அனர்த்தங்களையும் சந்தேகங்களையும் மையப்படுத்திய இரு நூல்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் வெளியீடு
கொழும்பு:
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் -மறைகரம் வெளிப்பட்டபோது", "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள் -முஸ்லிம்கள் மீது கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை களைதல்" ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி, வியாழக்கிழமை, மாலை 5 மணிக்கு கொழும்பு -7இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய "SRI LANKA'S EASTER TRAGEDY .Wheh the deep state gets out of its depth" என்ற ஆங்கில நூலை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் பி. ஏ தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
அன்று வெளியிடப்படும் அடுத்த நூல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த "WE ARE A PART NOT APART -Demystifying Myths Against Muslims of Sri Lanka" என்ற நூலின் தமிழாக்கம் ஆகும் .
இந்த நூல்கள் இரண்டினதும் ஆய்வுரையை பேராசிரியர் எம்.எஸ். எம் அனஸ் நிகழ்த்துவதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என் .எம்.அமீன் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
இவ்விரு நூல்களும் அண்மை காலத்தில் இலங்கையை உலுக்கிய அதிர்ச்சியான சம்பவங்களையும், அச்சுறுத்தல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
- ARA ஹஃபீஸ்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2025, 1:45 pm
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் மரணம்
January 27, 2025, 12:17 pm
பாகிஸ்தானுக்கு வங்காளதேசத்திலிருந்து நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் முஹம்மது இக்பால்
January 26, 2025, 5:22 pm
இலங்கையில் மோசமான காலநிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
January 26, 2025, 2:46 pm
கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அமெரிக்கா
January 26, 2025, 2:15 pm
நடுவானில் 245 பயணிகள் அலறல்; விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்
January 26, 2025, 10:12 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 60 பில்லியன் டாலரை முதலீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்
January 25, 2025, 5:36 pm
பிறப்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை ரத்து: டிரம்ப் அரசாணைக்கு இடைக்கால தடை
January 24, 2025, 6:25 pm