செய்திகள் உலகம்
பிரேசிலில் விமானத்தை தாக்கிய மின்னல்: வைரலாகும் வீடியோ பதிவு
சாவ் பாவ்லோ:
பிரேசில் நாட்டின் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தின் வால் பகுதியை மின்னல் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிரேசிலின் தெற்கே சாவ் பாவ்லோ நகரில் குவாருலோஸ் விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது, வானில் இருந்து மின்னல் விமானத்தின் வால் பகுதியை தாக்கியது. இதனை விமான பயணி ஒருவர் வீடியோவாக படம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர், பெரிய புயல் ஒன்று வீசியதால் விமானங்கள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது நாங்கள் பாதுகாப்பான இடத்தில் அமர்ந்திருந்தோம்.
அப்போது, நாங்கள் ஜன்னல் வழியே வெளியே பார்த்து கொண்டிருந்தபோது, விமான வால் பகுதியை மின்னல் தாக்கியதை படம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை வர்த்தக விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும் என பிரேசில் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் விமானம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கிய பின்னர், அந்த விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தாமதமாக புறப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2025, 10:34 am
Deepseek எனும் செயற்கை நுண்ணறிவு செயலியைச் சீனா உருவாக்கியுள்ளது
January 27, 2025, 1:45 pm
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் மரணம்
January 27, 2025, 12:17 pm
பாகிஸ்தானுக்கு வங்காளதேசத்திலிருந்து நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் முஹம்மது இக்பால்
January 26, 2025, 5:22 pm
இலங்கையில் மோசமான காலநிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
January 26, 2025, 2:46 pm
கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அமெரிக்கா
January 26, 2025, 2:15 pm
நடுவானில் 245 பயணிகள் அலறல்; விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்
January 26, 2025, 10:12 am