செய்திகள் உலகம்
இலங்கையில் மோசமான காலநிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
கொழும்பு:
இலங்கை நாடுமுழுவதும் கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான காலநிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
நேற்றைய (26) நிலவரப்படி, சில மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2025, 1:45 pm
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் மரணம்
January 27, 2025, 12:17 pm
பாகிஸ்தானுக்கு வங்காளதேசத்திலிருந்து நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் முஹம்மது இக்பால்
January 26, 2025, 2:46 pm
கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அமெரிக்கா
January 26, 2025, 2:15 pm
நடுவானில் 245 பயணிகள் அலறல்; விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்
January 26, 2025, 10:12 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 60 பில்லியன் டாலரை முதலீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்
January 25, 2025, 5:36 pm
பிறப்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை ரத்து: டிரம்ப் அரசாணைக்கு இடைக்கால தடை
January 24, 2025, 6:25 pm