நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிறப்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை ரத்து: டிரம்ப் அரசாணைக்கு இடைக்கால தடை

சியாட்டல்:

அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை  ரத்து செய்து அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறத்த அரசாணைக்கு சியாட்டல் மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

நீதிபதி ஜான் காஃபனர் பிறப்பித்த உத்தரவில், பிறப்புசார் குடியுரிமையை ரத்து செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ள அரசாணை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

எனவே, அந்த ஆணை அமல்படுத்தப்படுவது நிறுத்திவைக்கப்படுகிறது குறிப்பிட்டார்.
டிரம்பின் உத்தரவின்படி,  வரும் பிப்ரவரி 19ம் தேதிக்குப் பிறகு அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் தாய்க்கோ, தந்தைக்கோ அமெரிக்க குடியுமை அல்லது நிரந்தர குடியேற்ற உரிமை இல்லாமல் இருந்தால், அந்தக் குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படாது.

அமெரிக்காவில் பிறந்த எவரும் குடியுரிமை பெறும் தகுதி படைத்தவர்கள் என்ற அரசியல் சாசனத்தின் 14வது விதி அந்தக் குழந்தைகளுக்குப் பொருந்தாது.

அந்த ஆணையை எதிர்த்து,  ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்யும் 22 மாகாண அரசுகள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset