செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸ், மிண்டானாவ் தன்னாட்சிப் பிராந்திய பிரதிநிதிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் கலந்துரையாடல்
கொழும்பு:
பிலிப்பைன்ஸ் நாட்டில் நீண்டகால சுயாட்சிப் போராட்டத்தின் பின்னர் தங்களுக்கான சமாதான தீர்வை எட்டுவதில் அதிகபூர்வமான அரசியல் பரிமாணத்தை அடைந்துள்ள முஸ்லிம் மிண்டானாவ் பங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்திலிருந்து (Bangsamoro Autonomous Region in Muslim Mindano- BARMM) இம் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மோரோ தேசிய விடுதலை முன்னணி(MNLF),மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (MILF), கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினர் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கையைப் பொறுத்தவரை போருக்குப் பிந்திய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகள், இந்நாட்டின் அரசியல் அமைப்பு, தேர்தல் முறைமை, பாராளுமன்றம், மாகாண சபைகள், நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு போன்றவற்றைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் இருந்தும், செயலாளரிடமிருந்தும், எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட கட்சியின் இதர எம்.பிகளிடமிருந்தும்அவர்கள் போதிய விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்தப் மிண்டானாவ் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர் விடுதலை வீரர் நூர் மிசுஆரி((Nur Misuari) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபின் நண்பர் என்பதைச் சுட்டிக்காட்டிய தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம், தாமும் நூர் மிசுஆரியுடன் உரையாடி யுள்ளதாகவும் அவர் உரிமைகளை விட்டுக் கொடுக்காத மனோபாவம் உடையவர் என்பதையும் துணிச்சல் மிக்கவர் என்பதையும் அதன்போது தாம் அறிந்து கொண்டதாகவும் கூறினார் .
தூதுக் குழுவினர் தங்களது அனுபவங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கள் பிராந்தியத்துக்கு வருகை தருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கலரியிலிருந்து இந்த தூது குழுவினர் சபை அமர்வொன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளையில்,அவர்களது பிரசன்னம் பற்றி அப்பொழுது தலைமை தாங்கி கொண்டிருந்த பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி அறிவித்தார் .அதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பி அவர்களை கௌரவித்தனர்.
ஐக்கிய இராச்சியத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஜனநாயகத்திற்கானவெஸ்ட்மின்ஸ்டர் மன்றம்,பங்க்சமோரோ (Westminster Foundation for Democracy, Bangsamoro) இவர்களது வருகையை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பிராந்தியம், பிலிப்பைன்ஸ், மிண்டானாவ் தீவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
- A.R.A ஹஃபீஸ்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2025, 1:45 pm
சூடான் மருத்துவமனை மீது தாக்குதல்: 70 போ் மரணம்
January 27, 2025, 12:17 pm
பாகிஸ்தானுக்கு வங்காளதேசத்திலிருந்து நேரடி விமான சேவை: வங்கதேச தூதா் முஹம்மது இக்பால்
January 26, 2025, 5:22 pm
இலங்கையில் மோசமான காலநிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
January 26, 2025, 2:46 pm
கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அமெரிக்கா
January 26, 2025, 2:15 pm
நடுவானில் 245 பயணிகள் அலறல்; விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்
January 26, 2025, 10:12 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 60 பில்லியன் டாலரை முதலீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்
January 25, 2025, 5:36 pm
பிறப்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை ரத்து: டிரம்ப் அரசாணைக்கு இடைக்கால தடை
January 24, 2025, 6:25 pm