நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நடுவானில் 245 பயணிகள் அலறல்; விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்

லாகோஸ்:

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாகோஸில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் லாகோஸில் இருந்து வாஷிங்டன் பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முர்தலா முஹம்மது சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

245 பயணிகள் மற்றும் 11 குழு உறுப்பினர்களுடன் பயணித்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் திடீரென கேபின் அழுத்தம் குறைந்து.

பலமுறை திடீரென உயரம் குறைந்தது. இதனால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டன.

நைஜீரியா கூட்டாட்சி விமான நிலைய ஆணையம் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டது.

ஆனால் நான்கு பயணிகள்,  இரு குழு உறுப்பினர்கள் கடுமையான காயங்களுடன், 27 பயணிகள், ஐந்து குழு உறுப்பினர்கள் லேசான காயங்களுடன் இருந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset