நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அமெரிக்கா

வாஷிங்டன்:

கோவிட்-19 நோய்த் தொற்றுக்குக் காரணமான கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

வைரஸ் விலங்குகளிடமிருந்து பரவியதா, சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்ததா என்ற குழப்பம் நீடிக்கிறது.

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவின் புதிய மதிப்பீடு வந்துள்ளது. 

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்படி ஆய்வுக் கூடத்திலிருந்து கசிவு ஏற்பட்டதற்கான சாத்தியம் அதிகம் என்று மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CIA) தெரிவித்தது. 

கோவிட்-19 சம்பவங்கள் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றின. 

அங்கு கொரோனா வைரஸ் ஆராய்ச்சி பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதுண்டு.

ஆக அருகே உள்ள வௌவால் கூட்டங்கள் வூஹானிலிருந்து சுமார் 1,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.

அவற்றின் வழி கிருமி பரவியதற்கான சாத்தியத்தையும் ஆராயவிருப்பதாக CIA கூறியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset