நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன் 

புத்ராஜெயா:

இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ  ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தெக்குன் கீழ் இந்திய தொழில் முனைவர்களின் மேம்பாட்டிற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இவ்வாண்டு வரலாற்றில் முதல் முறையாக தெக்குன் கீழ் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தெக்குன் ஸ்பூமி, ஸ்பூமி கோஸ் பிக் திட்டங்களின் வாயிலாக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5,000 இந்திய தொழில் முனைவர்கள் பயனடையும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் இலக்கின் அடிப்படையில் அமைச்சு இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

வழக்கம் போல் இந்த நிதியை விநியோகிக்கும் செயல் முறையை  அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்.

குறிப்பாக திறமையான விநியோக முறை உறுதி செய்யப்படும் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

முன்னதாக தெக்குன் ஸ்பூமி கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து 26,804 இந்திய தொழில்முனைவோருக்கு 500 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் ஸ்பூமி திட்டத்தின் 2,408 இந்திய தொழில்முனைவர்களுக்கு 58.9 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பூமி கோஸ் பிக் வாயிலாக 287  இந்திய தொழில்முனைவர்களுக்கு 12.6 மில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset