நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றாந்தாய் மகன் கொலை: முன்னாள் முகவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்பு தண்டனை.

புத்ராஜெயா: 

2019ஆம் ஆண்டு தனது இரண்டு வயது மாற்றான் தாய் பிள்ளையைக் கொன்ற வழக்கில், முன்னாள் முகவர் முகமது சோபியுதின் அபூ பக்கர் (34)க்கு முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

ஆரம்பத்தில், சுங்கைப்பட்டாணி உயர்நீதிமன்றம் கொலைக் குற்றச்சாட்டை மாற்றி, நோக்கமற்ற கொலை என வகைப்படுத்தி 16 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

ஆனால், அரசு தரப்பின் மேல் முறையீட்டின் பின்னர், மேல் முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி, அவரை கொலைக்கான குற்றவாளி என்று அறிவித்தது.

நீதிபதி அகமட் ஸைடி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் குழு இந்த தீர்ப்பை வழங்கியது.

முன்னதாக உயர்நீதிமன்ற நீதிபதி கொலை குற்றத்தின் நோக்கத்தை நிரூபிக்க முடியவில்லை என்று தீர்மானித்தது தவறு,” என்று நீதிபதி அகமட் ஸைடி தெரிவித்தார். அதோடு மேல்முறையீட்டில், அரசுத் தரப்பின் மனுவிற்கு நீதிமன்றம் ஆதரவு அளித்தது.

சிறைத்தண்டனை 2019 மே 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளில் இருந்து கணக்கிடப்படும். அதோடு கூடுதலாக, 12 ஆண்டுகள் சிறை தண்டனைகளையும் (whipping) விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முகமது சோபியுதின் தனது மாற்றான் பிள்ளை முகமது அகில் ஹைரி மொக்தர் அஸ்ருலை கொலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டார்.

குற்றச்சம்பவம் 2019 மே 25ஆம் தேதி மாலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கெடா மாநிலம் குவார் செம்பேடக் பகுதியில் உள்ள வீட்டில் நடந்தது.

முன்னதாக 2023 ஜூலை 4ஆம் தேதி, சுங்கைப்பட்டாணி உயர்நீதிமன்றம் நோக்கமற்ற கொலை என இதை வகைப்படுத்தி முகமது சோபியுதினுக்கு 16 ஆண்டுகள், 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கியது.

இன்று நடந்த விசாரணையில் மேல் முறையீட்டு நீதிமன்றம், அரசுத் தரப்பின் மனுவை ஏற்று, குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனையை விதித்தது.

-தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset