நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா வளர்ந்த நாடாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் உதவ வேண்டும்: பிரதமர் மோடி

புது டெல்லி:  

2047-இல் இந்தியா வளர்ந்த நாடாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்ற 18ஆவது வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா ஜனநாயகத்தின் தாய்.

வாளின் வலிமையால் அரசர்கள் பகுதிகளை விரிவாக்கம் செய்தபோது அசோகர் அமைதிக்கான பாதையைத் தேர்வு செய்தார். இது இந்தியப் பாரம்பரியத்தின் வலிமையாகும்.

இந்தப் பாரம்பரியம் காரணமாக எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; மாறாக புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனையில் உள்ளது என்று உலகிற்கு இந்தியாவால் சொல்ல முடிகிறது.

இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பல்வேறு நாடுகளும் நேரடியாகத் தெரிந்து கொள்வதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜி20 மாநாடுகள் நடத்தப்படுகின்றன என்றார் மோடி.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset