
செய்திகள் சிந்தனைகள்
நளினமான வார்த்தைகள் - வெள்ளிச் சிந்தனை
பத்ருப் போர் தொடங்குமுன் தோழர்களிடம் நபிகளார் ஆலோசனை செய்தார்கள்.
நபிகளாரை எப்படியேனும் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக ஸஅத் இப்னு முஆத் (ரலி) கூறினார்:
"அல்லாஹ்வின் தூதரே! இங்கே உங்களுக்காக நாங்கள் உயரமான ஒரு பரணி வீட்டைக் கட்டுகிறோம். அதில் நீங்கள் இருங்கள். வேகமாக ஓடும் வாகனத்தையும் ஏற்பாடு செய்கிறோம். நாளை நடக்கவிருக்கும் போரில் நமக்கு வெற்றி கிடைத்தால் நல்லது. இல்லையேல் இந்த வாகனத்தில் ஏறி மதீனாவில் இருக்கும் எங்கள் மக்களிடம் சென்று சேர்ந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் பலர் இங்கு வரவில்லை. எங்களை விட அவர்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள். போர் நடக்கும் என்று தெரிந்திருந்தால் உங்களை விட்டு அவர்கள் ஒருபோதும் பின்தங்கியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் நீங்கள் சென்றால் அவர்கள் மூலம் அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பான்'' (ரஹீகுல் மக்தூம்)
ஸஅத் இப்னு முஆத் (ரலி அவர்களுடைய பதிலை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். வெள்ளை உள்ளத்துடனும், ஏனைய சகோதரர்கள் மீதான நல்லெண்ணத்துடனும் தமது கருத்தை தெரிவிக்கிறார்.
"நாங்கள்தான் உங்களுடன் போர் செய்ய வந்தோம். அவர்கள் மதீனாவில் ஜாலியாக இருக்கிறார்கள்'' என்று சொல்லவில்லை.
நல்ல விஷயங்களில் நம்முடன் கலந்து கொள்ளாதவர்கள் குறித்து நாமும் இப்படித்தானே யோசிக்க வேண்டும்.
வயதான பெற்றோரை மருத்துவமனைக்கு நாம் மட்டும் அழைத்துச் செல்ல, நமது சகோதரர்கள் யாரும் வராவிட்டால் நாம் என்ன நினைப்போம்? பெற்றோருக்கு நாம் மட்டும் செலவுக்குப் பணம் கொடுக்க, மற்ற சகோதரர்கள் கொடுக்காவிட்டால் நாம் என்ன நினைப்போம்?
"உங்களுக்கு நான் மட்டும்தான் பிள்ளையா?'' என்று கேட்டு செய்த நன்மையை பாழாக்கிவிடாதீர்கள்.
அவர்களுக்கு வேறு ஏதேனும் முக்கிய வேலை இருந்திருக்கும் என்று நல்லெண்ணம் வையுங்கள்.
ஓர் ஏழைக்கு உதவி செய்ய பணம் திரட்டுகிறீர்கள் என்றால், "நாங்கதான் உதவினோம், மத்தவங்க யாரும் ஒண்ணுமே பண்ணல'' என்று கூறாதீர்கள்.
"அவர்களுக்கு வேறு தேவைகள் இருந்திருக்கும். இல்லையென்றால் எங்களைவிட அதிகம் உதவியிருப்பார்கள்'' என்று கூறுங்கள்.
அறிஞர் ஷீராஸி கூறுகின்றார்: ஒருநாள் நானும் என் தந்தையும் மட்டும் இரவுத் தொழுகையில் ஈடுபட்டோம். எங்களுடன் இருந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.
தந்தையிடம் நான், "இவர்கள் எழுந்து இரண்டு ரக்அத் தொழுதிருக்கலாமே'' என்று சொன்னேன்.
அதற்கு தந்தை, "அருமை மகனே! அடுத்தவர் குறித்து இவ்வாறு பேசுவதைவிட, நீயும் தூங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்றார்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm