செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ்: தமிழகத்தில் இருவர் பாதிப்பு
சென்னை:
தமிழகத்தில் இருவருக்கும், கர்நாடகம், குஜராத்தில் மூவருக்கும் என 5 குழந்தைகளுக்கு HMP வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் HMP வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது இது பல்வேறு நாடுகளுக்கு அதிக அளவில் பரவி வருகிறது. இந்தியாவில் 5 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது. மற்றொரு 8 மாத ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இக் குழந்தைகள் சர்வதேசப் பயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பிறந்து இரண்டு மாத ஆண் குழந்தைக்கு HMP வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்தில் இரு குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2001 முதல் தமிழகத்தில் நிலவி வரும் சாதாரண வைரஸ் தொற்றுதான் என்று . ஓய்வு, நீர்ச்சத்தைத் தக்க வைக்கும் சிகிச்சைகளை மேற்கொண்டால் இந்த பாதிப்பு சரியாகிவிடும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 4:55 pm
மாநில உரிமைகளை பறிக்கும் யுஜிசியின் முடிவு கண்டனத்திற்குரியது: பேராசிரியர் ஜவாஹிருல்லா
January 6, 2025, 1:14 pm
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியதால் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார் ஆளுநர்
January 6, 2025, 8:48 am
தமிழகத்தில் இன்று முதல் 11-ஆம் தேதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
January 3, 2025, 7:48 pm
ஆடுகளை அடைக்கும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட குஷ்பு, பாஜகவினர்: மதுரையில் பரபரப்பு
January 3, 2025, 3:22 pm
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணியொருவரிடமிருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
January 1, 2025, 7:54 pm