செய்திகள் சிந்தனைகள்
7 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பார்கள்! ஆனால்..! வெள்ளிச் சிந்தனை
"எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான்''. (29:60)
நம்மைச் சுற்றியிருக்கும் இந்தப் பேரண்டத்தைப் பாருங்கள்: பறவைகள், மீன்கள், பாம்புகள், விலங்குகள், பாக்டீரியாக்கள் என எந்த உயிரினமாக இருந்தாலும்…
சட்டைப் பை வைத்த ஆடைகள் எதுவும் அவற்றுக்குக் கிடையாது. தங்களுக்கென தனித்தனி வங்கிக் கணக்குகள் கிடையாது. சுகாதார காப்பீட்டுத் திட்டம் எதுவும் கிடையாது. ஓய்வு ஊதியமும் கிடையாது.
படைத்த இறைவன் உணவளிப்பான் என்ற நம்பிக்கையில் அதிகாலையில் அவை உணவு தேடிச் செல்கின்றன. பசியால் செத்து மடிந்ததாக எந்த உயிரினத்தையும் பார்க்க முடியாது.
எனவே உங்கள் வாழ்வாதார விவகாரங்களையும் அவனிடமே ஒப்படையுங்கள். அந்த விஷயத்தில் அவனை மட்டுமே நம்புங்கள். அவன் கைவிட மாட்டான்.
ஓர் எறும்பிடம் சுலைமான் (அலை), "ஒரு வருடத்தில் எத்தனை தானியங்கள் சாப்பிடுவாய்?'' என்று கேட்டார்கள்.
அது, "இரண்டு'' என்றது. உடனே அந்த எறும்பையும் இரண்டு தானியங்களையும் ஒரு பெட்டியில் வைத்தார்கள்.
ஒரு வருடத்திற்குப் பிறகு வந்து பார்த்தால் ஒரேயொரு தானியத்தை மட்டுமே அந்த எறும்பு சாப்பிட்டிருந்தது. "என்ன காரணம்?'' என்று சுலைமான் நபி கேட்டார்கள்.
அதற்கு அந்த எறும்பு கூறியது, "நான் சுதந்திரமாக நடமாடியபோது எனது விவகாரம் அல்லாஹ்வின் கைகளில் இருந்தது. எனவே அவன் என்னை ஒருபோதும் மறக்க மாட்டான் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.
ஆனால் எனது விவகாரம் உங்கள் வசம் வந்தபோது என்னை மறந்துவிடுவீர்களோ என்று நான் அஞ்சினேன்''.
மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். இறைவனை நம்புவதாகக் கூறுவார்கள். ஆனால் செயல்கள் எல்லாம் நேர் முரணாக இருக்கும்.
ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பார்கள். இறுதியில் ஒன்றும் இல்லாமல் ஒருநாள் போய் சேர்வார்கள்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
January 31, 2025, 8:19 am
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
January 24, 2025, 7:22 am
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
January 10, 2025, 8:40 am
நளினமான வார்த்தைகள் - வெள்ளிச் சிந்தனை
December 27, 2024, 8:05 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 25, 2024, 11:03 pm
"இறைவனிடம் கையேந்துங்கள்..” மனிதநேயக் குரலுக்கு நூற்றாண்டு! நாகூர் ஹனீபா பிறந்த நாள்!
December 20, 2024, 9:22 am
கவலைகள், தோல்விகள் ஏற்பட்டால் உங்களை நீங்களே மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 13, 2024, 7:47 am
நீங்கள் நீங்களாக இருங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 11, 2024, 6:49 pm