நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசிய சாம்பியன் சிலம்பப் போட்டியில் 12 தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியனானது மலேசியா

கோலாலம்பூர்:

ஆசிய சாம்பியன் சிலம்பப் போட்டியில் 12 தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மலேசியா கைப்பற்றியது.

மலேசியாவின் சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் எம். சுரேஸ் இதனை உறுதிப்படுத்தினார்.

ஆசிய பொது சிலம்ப சாம்பியன் போட்டி கத்தாரில் நேற்று நடைபெற்றது.

இதில்  மலேசிய சிலம்பம் அணி 12 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

தோஹா விளையாட்டு வளாத்தில் நடைபெற்ற போட்டியில் தனிநபர், போர் திறன் பிரிவுகள் மூலம் ஆறு தேசிய விளையாட்டு வீரர்கள் தலா இரண்டு தங்கம் வென்றனர்.

60 கிலோவுக்கு மேல் ஆடவர் பிரிவில் பிரகாஷ், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஷஸ்திவேனா (55 கிலோ-65 கிலோ), லீனாஸ்ரீ (30 கிலோ-40 கிலோ), கவிதிரா (45 கிலோ-55 கிலோ), தர்னிஷா (55 கிலோ - 65 கிலோ),  15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ரனிஷா (70 கிலோவுக்கு மேல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

இதில் போட்டியை நடத்தும் கட்டார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) முறையே இரண்டாவது,  மூன்றாவது இடங்களைப் பிடித்ததாக டாக்டர் சுரேஸ் கூறினார். 

இந்த போட்டியில் இந்தியா, சவூதி அரேபியாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset