நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பளபளப்பை இழந்த பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்

பாரிஸ்: 

கடந்த 2024ஆம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தாங்கள் வென்ற பதக்கங்கள் பளபளப்பை இழந்து கறுத்துப்போனதாகக் கூறி, இரு பிரான்ஸ் விளையாட்டாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிளமென்ட் செக்கி, யோகன் எண்டோயே புகுவா என்ற அவ்விருவரும், தங்களது பதக்கங்களின் மோசமான நிலையைப் படம்பிடித்து, இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நான்கு மாதங்களே ஆன நிலையில், பதக்கங்களின் மோசமான தரத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக இது அமைந்துள்ளது.

அவ்விருவரும் 4x100 மீட்டர் நீச்சலில் பதக்கம் வென்றிருந்தனர்.

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட பதக்கம் முதலைத் தோல் போன்று ஆகிவிட்டதாக செக்கி சாடியுள்ளார்.

அதற்குச் சான்றாக, அப்பதக்கத்தின் தற்போதைய நிலை குறித்த படத்தை அவர் தமது சமூக ஊடகப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தமது பதக்கமும் அவ்வாறு ஆகிவிட்டதாகக் கூறி, அது பாரிஸ் 1924 ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற பதக்கம்போல் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் புகுவா.

மோசமான பதக்கத் தரம் குறித்து ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு சாடப்பட்டுள்ளது இது முதன் முறையன்று.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset