நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வியட்நாமிய மக்களிடையே தனியே நின்ற சிங்கப்பூர் ரசிகர்

ஹனோய்:

ஆசியான் கிண்ணக் கால்பந்து போட்டியில் வியட்நாமுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அரையிறுதிச் சுற்று அண்மையில் வியட்நாமில் நடைபெற்றது.

ஆட்டம் சொந்த மண்ணில் நடைபெறவில்லை என்றாலும் சிங்கப்பூரர்கள் சிலர் அணிக்கு ஆதரவளிக்க அங்குச் சென்றிருந்தனர்.

குறிப்பாக வியட்நாம் மக்களிடையே தனியே நின்ற சிங்கப்பூர் ரசிகர் ஒருவர்
நிருபர்களின் கவனத்தை ஈர்த்தார்.

விளையாட்டு அரங்கத்தின் ஒரு பகுதியில் வியட்நாம் ரசிகர்கள் நிறைந்திருந்தனர்.

அருகில் உள்ள பகுதியில் கூட்டம் இல்லை. அதில் ஒருவர் மட்டும் நிற்கிறார். சிங்கப்பூருக்கு ஆதரவளித்து கைகளை அங்கும் இங்கும் அசைக்கிறார்.

விளையாட்டுக் காணொலிகளைத் தயாரிக்கும் 28 வயது ஓங் வீ ஹர்ன் தீவிர ரசிகர்.

அவர் மலேசியாவில் நடைபெற்ற தகுதிச் சுற்றுக்கும் சென்றிருந்தார். பின்னர் வியட்நாமில் நடந்த ஆட்டத்தைக் காணவும் சென்றிருந்தார்.

ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் தோல்வியுற்றாலும் ஓங்கிற்கு மகிழ்ச்சி என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset