செய்திகள் உலகம்
பாரிஸை நோக்கிச் சென்ற விமானத்தில் இலங்கைப் பெண் உயிரிழந்தார்
பாரிஸ்:
பாரிஸ் நோக்கிச் சென்ற விமானத்தில் பயணித்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. தோஹாவிலிருந்து பாரிஸ் சென்ற விமானத்தில் பயணித்த 81 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதார்.
பாரிஸ் செல்லும் விமானத்தில் இலங்கைப் பெண் ஒருவர் சுகயீனமடைந்துள்ளதாக குர்திஸ்தான் பிராந்தியத்தின் அதிகாரிகள் தங்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக எர்பிலில் உள்ள இலங்கையின் தூதர் அகமது ஜலால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதனையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரியுள்ளார்.
விமானம் மாலை 5.40 மணிக்கு எர்பில் விமான நிலையத்திற்கு வந்தது என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், மருத்துவக் குழுக்கள் உதவி வழங்க வந்ததாகவும், எனினும், அந்தப் பெண் விமானத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
81 வயதான அந்தப் பெண் பிரான்சில் வசித்து வந்தார். பிரான்ஸ் குடிமகனான அவரது மகனை இலங்கைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.
மேலும் தாயாரின் உடலை பாரிஸுக்கு கொண்டு செல்ல உதவுமாறு மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 5:26 pm
டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லா கார்; பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்: எலன் மஸ்க்
January 1, 2025, 10:08 pm
லோஸ் ஏஞ்சல்ஸில் இரு விமானங்கள் மோதிக் கொள்ளவிருந்தன: தக்க நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது
December 31, 2024, 7:04 pm
கம்போடியா ஹோட்டலில் கைப்பெட்டி ஒன்றில் சடலம்
December 31, 2024, 12:54 pm
தென் கொரிய விமான விபத்து: உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது
December 31, 2024, 11:33 am
விமான விபத்துக்குப் பிறகு 68,000 வாடிக்கையாளர்கள் ஜேஜூ ஏர் டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்தனர்
December 31, 2024, 11:31 am
ஒரு சிகரெட் புகைத்தால் ஆயுளில் 20 நிமிடங்கள் குறையும்: லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல்
December 30, 2024, 12:16 pm
வீடு திரும்ப மறுத்த கணவனின் முகத்தை சரமாரியாக கீறினார் மனைவி
December 30, 2024, 12:15 pm
அஸர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்யா பொறுப்பேற்கவேண்டும்: அதிபர்
December 30, 2024, 7:55 am