நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார்

வாஷிங்டன்:

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter) காலமானார்.

அவருக்கு வயது 100.

மறைந்த கார்ட்டரின் குடும்பத்திற்குப் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டர் 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்தார்.

மனித உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதற்காகவும் உலகில் நிலவும் பூசல்களைச் சமாளிக்க முயற்சி மேற்கொண்டதற்காகவும் 2002ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் (Nobel) பரிசு வழங்கப்பட்டது. 

கார்ட்டர் 1924ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் பிறந்தார்.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

+ - reset