நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய எல்லையில் சீனா உலகின் மிகப் பெரிய அணையைக் கட்டுகிறது

பெய்ஜிங்:

இந்தியா எல்லையான அருணாசல பிரதேசம் அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

சீனா அதிகாரத்துக்கு உள்பட்ட திபெத்தில் இந்த அணை கட்டுப்படுகிறது. சுமார் 137 பில்லியன் டாலர் மதிப்பில் இந்ச அணை கட்டப்படுகிறது. இந்த நதி இந்தியா, வங்கதேசத்தில் பாய்வதால் இருநாடுகளும் பாதிக்கப்படும்.

இந்த அணையில் உள்ள  நீர்மின் நிலையத்தில் ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டவுடன் திபெத் தன்னாட்சி பிராந்தியத்துக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset