நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு 

கொழும்பு:

கொழும்பு, கண்டி, காலி, வடமாகாணத்தில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு

கொழும்பு, கண்டி, காலி, வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் சாதகமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணப் பகுதியில் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளதா என நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான விசாரணையின் போது யாழ்.மாவட்டக் காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக மக்களுக்குத் தெரிவிக்கும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஒரு குழுவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த கலாநிதி உமாசுகி நடராஜா என்பவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset