
செய்திகள் சிந்தனைகள்
கவலைகள், தோல்விகள் ஏற்பட்டால் உங்களை நீங்களே மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள் - வெள்ளிச் சிந்தனை
“கூறுவீராக! இத்துன்பம் உங்களால்தான் வந்தது” (திருக்குர்ஆன் 3:165)
உங்களுக்கு ஏதேனும் கவலைகள், தோல்விகள் ஏற்பட்டால் உங்களை நீங்களே மீள்பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.
காரணம் அல்லாஹ் உங்களை சோதிக்கிறான்.
ஏனெனில், உங்களிடம் இருக்கும் சில விஷயங்களை சீர்படுத்த உங்களை சோதிப்பதுதான் ஒரேவழி. சோதனைகள்தான் மனிதனை சீர்படுத்தும்.
நபி ஸுலைமான் (அலை) காலத்தில் ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டது.
அப்போது மழை வேண்டித் தொழ ஸுலைமான் (அலை) மக்களோடு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஓர் எறும்பு தன் கரங்களை உயர்த்தி இவ்வாறு பிரார்த்திப்பதை அவர் கண்டார்:
“இறைவா! தண்டனைகள் பாவத்தின் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்பதை நீ அறிவாய். ஆனால் பாவமன்னிப்பின் மூலம் அது நீங்குகிறது. நாங்களும் உனது படைப்புகள்தான். நாங்களும் உனது அடியார்கள்தான். மனிதர்கள் செய்யும் குற்றத்திற்காக எங்களைத் தண்டித்துவிடாதே!”
இதைக் கேட்ட ஸுலைமான் (அலை), “திரும்பிச் செல்லுங்கள். இந்த எறும்பின் பிரார்த்தனை காரணமாக உங்கள் வேண்டுதல் அங்கீகரிக்கப்பட்டு விட்டது!”என்றார். (இப்னு கஸீர்)
வாழ்வில் ஏதேனும் சோதனை, துன்பம், பின்னடைவு ஏற்படுகிறது என்றால் நம்மை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 7:57 am
உச்சம் தொட்டவர்கள் வீழ்ச்சி காண்பர் - வெள்ளிச் சிந்தனை
January 31, 2025, 8:19 am
வாள் எடுத்து போர் புரிவது மட்டும்தான் இறைப் பாதையில் போராடுவதாகுமா?
January 24, 2025, 7:22 am
இளைத்தல் இகழ்ச்சி - வெள்ளிச் சிந்தனை
January 10, 2025, 8:40 am
நளினமான வார்த்தைகள் - வெள்ளிச் சிந்தனை
January 3, 2025, 9:27 am
7 தலைமுறைக்கும் சொத்து சேர்ப்பார்கள்! ஆனால்..! வெள்ளிச் சிந்தனை
December 27, 2024, 8:05 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 25, 2024, 11:03 pm
"இறைவனிடம் கையேந்துங்கள்..” மனிதநேயக் குரலுக்கு நூற்றாண்டு! நாகூர் ஹனீபா பிறந்த நாள்!
December 13, 2024, 7:47 am