நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உச்சநீதிமன்ற கொலீஜியம் முன் ஆஜரான அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி

புது டெல்லி: 

விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்று முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் உச்சநீதிமன்ற கொலீஜியம் முன்  ஆஜராகி விளக்கமளித்தார்.

பெரும்பான்மையாக உள்ள மக்களின் விருப்பத்துக்கேற்பவே இந்தியா செயல்பட வேண்டும். இதுதான் சட்டம் என்றும் பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கு ஆதரவாகவும் நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியது.

இதற்கு எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதினர்.

இது தொடர்பாக  பதிலளிக்குமாறு அலாகாபாத் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் முன் நீதிபதி சேகர் குமார் யாதவ் செவ்வாய்க்கிழமை ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்ததார்.

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ள நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்  அளித்துள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset