
செய்திகள் இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா எதிர்ப்புக்கு இடையே தாக்கல்
புது டெல்லி:
மக்களையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவையில் சுமார் 90 நிமிஷங்கள் நீடித்த விவாதத்துக்குப் பின்னர், மசோதாக்களைத் தாக்கல் செய்வது தொடர்பாக முடிவு செய்வதற்காக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நடைபெற்ற மின்னணு வாக்கெடுப்பு இதுவாகும்.
மசோதாவைத் தாக்கல் செய்வதற்கு 269 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 198 எம்.பி.க்கள் எதிராகவும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், இரு மசோதாக்களையும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.
எனினும், மசோதாவை நிறைவேற்ற 2இல் 3 பங்கு எம்.பி.க்களின் ஆதரவு ஆளும் பாஜக கூட்டணிக்கு இல்லை என்பதால் இந்த மசோதா நிறைவேற்றுவதில் சிக்கில் உள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசமைப்புச் சட்ட திருத்தத்தை மேற்கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது.
காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பேசுகையில், இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றார்.
5 ஆண்டுக்கான அரசை தேர்வு செய்யும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அந்த உரிமையைப் பறிக்கக் கூடாது என்று மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசுகையில், அரசியல் ஆதாயத்தை அதிகரிப்பதே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவின் நோக்கம். இந்த மசோதா மாநிலக் கட்சிகளை அழித்துவிடும் என்றார்.று விமர்சித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவரும் பாஜகவின் நடவடிக்கை, நாட்டில் சர்வதிகாரத்தை கொண்டு வரும் முயற்சியாரும் என்று சமாஜவாதி எம்.பி. தர்மேந்திர யாதவ் குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, வாக்கெடுப்பில் பங்கேற்காத 20 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பாஜக முடிவு செய்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:59 pm
மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி: நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm