நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவிடமிருந்து ஆதாரங்களை பெறுவதில் நஜிப் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்: வழக்கறிஞர் குழு

கோலாலம்பூர்:

1 எம்டிபி தொடர்பான ஆதாரங்களைப் பெறுவதற்கான தனது கோரிக்கைக்கு அமெரிக்க நீதித்துறையிடமிருந்து கடுமையான எதிர்ப்பை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் எதிர்கொண்டார்.

நஜிப்பின் வழக்கறிஞர் சட்டக் குழு இதனை விளக்கியது.

முன்னாள் வங்கியாளர் டிம் லீஸ்னர், கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியோரிடமிருந்து ஆதாரங்களைப் பெறுவதற்காக 2020 இல் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது,

2021ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தால் முதலில் அங்கீகரிக்கப்பட்டது.

இருப்பினும், அமெரிக்க நீதித்துறை  பின்னர் தலையிட்டு கண்டுபிடிப்பு முயற்சியை தாமதப்படுத்தியது.

அமெரிக்க நீதித்துறை விண்ணப்பத்தை ஒத்திவைத்ததை நஜிப் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால் அது வெற்றிபெறவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset