நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை; நஜிப்பை முழுமையாக விடுவிக்க வேண்டும்: நிக் முஹம்மத்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் வீட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாறாக அவரை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்று செனட்டர் நிக் முஹம்மத் அப்துஸ் நிக் அப்துல் அஜிஸ் வலியுறுத்தினார்.

நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்க நான் பரிந்துரைக்கவில்லை.

முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் அவரது உரிமை என்று மறைந்த பாஸ் கட்சியின் ஜாம்பவான் நிக் அஜிஸ்   மகனான அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், நஜிப்பின் மகன் முகமட் நிசார், 

பகாங் சுல்தான் தனது தந்தையின் 6 ஆண்டு சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க கூடுதல் உத்தரவு இருப்பதைத் தெரிவித்ததாக ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

இது நீதிமன்ற விவகாரமாகிவிட்டதால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என பிரதமர் டத்தோஶ்ரீ   அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset