நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியுடனான ஐபிஎப் கட்சியின் சகோதரத் தன்மை பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ ஸம்ரி

பாங்கி:

தேசிய முன்னணியுடனான ஐபிஎப் கட்சியின் சகோதரத் தன்மை பாராட்டுக்குரியது.

தேசிய முன்னணி தலைமை செயலாளரும் உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் இதனை கூறினார்.

டத்தோ லோகநாதன் தலைமையில் ஐபிஎப் கட்சி தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது.

தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை ஐபிஎப் தொடர்ந்து ழங்கி வருகிறது.

மறைந்த முன்னாள் ஐபிஎப் தேசிய தலைவர் டத்தோ எம் சம்பந்தன், தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமத் ஜாஹித் ஹமிடிக்கு நெருங்கிய நண்பர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசிய முன்னணிக்கு ஐபிஎப் முழு ஆதரவை வழங்கி வருகிறது.

மேலும் சகோதர தன்மையை வலுப்படுத்தும் தேசிய முன்னணி, ஐபிஎப் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று பாங்கி அவென்யூ மண்டபத்தில் ஜபிஎப் கட்சியின் 32ஆவது தேசிய பொதுப் பேரவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுப் பேரவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கிம்மா கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ நல்லா கேஎஸ், டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான், தேசிய முன்னணி உறுப்பு கட்சியின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset