நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐபிஎப் கட்சியின் விசுவாசத்திற்கு தேசிய முன்னணி உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்: டத்தோ லோகநாதன்

பாங்கி:

ஐபிஎப் கட்சி தொடர்ந்து தேசிய முன்னணிக்கு  விசுவாசமாக இருந்து வருகிறது.

இந்த விசுவாசத்திற்கு தேசிய முன்னணி உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் வலியுறுத்தினார்.

கடந்த 34 ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு வற்றாத ஆதரவை ஐபிஎப் வழங்கி வருகிறது.

ஜபிஎப் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தேசிய முன்னணிக்கு தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தேசிய முன்னணிக்கு எங்களின் வற்றாத ஆதரவு தொடரும்.

அதே வேளையில் எங்களின் விசுவாசத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

ஐபிஎப் கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சியாகவே இருந்து வருகிறது.

இந்நிலை மாறி ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக இணைய வேண்டும்.

இதனை தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இன்று பாங்கி அவென்யூ மண்டபத்தில் ஜபிஎப் கட்சியின் 32 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கை உரையாற்றிய போது டத்தோ லோகநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான பேராளர்கள் கலந்து கொண்ட ஐபிஎப் தேசிய பேராளர் மாநாட்டை தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர்  அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset