நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெங்கு ஜஃப்ருல் பிகேஆரில் இணைந்தரா? மெகட் ஜுல்கர்னைன் மறுப்பு 

கோலாலம்பூர்:

அம்னோ  உச்சமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளதாக வெளிவந்த வதந்தியைச் சிலாங்கூர் மாநில அம்னோ தகவல் தொடர்பு தலைவர் மெகட் சுல்கர்னைன் மறுத்துள்ளார். 

தெங்கு  ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் பிகேஆரில் இணைவார் எனும் செய்தி  வதந்தியாகக் கருதப்படுகின்றது.

மேலும், கோத்தா ராஜா தொகுதிக்கான அம்னோ தலைவராக இருக்கும் தெங்கு ஜப்ருல்  கட்சியின் மீது அதிகளவு பற்று இருப்பதாகவும் வைத்துள்ளார் என்று  மெகட் சுல்கர்னைன் கருத்துரைத்தார். 

தனக்கும் தெங்கு  ஜஃப்ருலுக்கும் இடையிலான உறவில் எந்த விரிசலும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார். 

அம்னோ கட்சியின்  மீது தெங்கு ஜஃப்ருலின் பற்று அதிகமாக இருப்பதனால் ,இக்கருத்து ஒரு வதந்தியாக இருக்கக்கூடும்,  என்று அவர் கூறினார். 

முன்னதாக, தெங்கு ஜஃப்ருல் அம்னோவிலிருந்து விலகி பிகேஆரில் சேருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ஓர் ஊடகம் 
செய்தி வெளியிட்டுள்ளது.

- சாமுண்டிஸ்வரி பத்துமலை & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset