நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனரக வாகனங்கள் அவ்வப்போது புஷ்பகோம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்: நையோஸ்

பாங்கி:

கனரக வாகனங்கள் அவ்வப்போது புஷ்பகோம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

நையோஸ் எனப்படும் தேசிய தொழில் பாதுகாப்பு, சுகாதார நிறுவனத்தின்   துணைத் தலைவர் மணிவண்ணன் கோவின் இதனை கூறினார்.

பாதுகாப்பற்ற கனரக வாகனங்கள் சாலையில் செல்வதைக் கண்காணிக்க அனைத்து கனரக வாகனங்களும்  கடுமையான மேற்பார்வையின் கீழ் அவ்வப்போது சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதன் மூலம் ஜேபிஜே பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்காத கனரக வாகனங்கள் மீது கடுமையான அபராதம், நடவடிக்கை மூலம் அமலாக்க முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை ஏழு உயிர்களைக் கொன்ற வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 204இல் நடந்த பயங்கர விபத்து குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கனரக போக்குவரத்து நிறுவனங்கள் குறிப்பாக டிரெய்லர்,பஸ் ஓட்டுநர்களுக்கு மிகவும் விரிவான தொடர்ச்சியான பாதுகாப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இந்தப் பயிற்சியில் கவனமாக வாகனம் ஓட்டுதல், சாலைச் சட்டங்களைப் பற்றிய புரிதல், முழுமையான பாதுகாப்புக் கொள்கைகளை உறுதுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset