நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டிற்குள் நுழைவதற்கான சோதனையை தவிர்க்க முயற்சித்த அந்நிய நாட்டினர் கண்டறியப்பட்டனர்

சிப்பாங்:

நாட்டிற்குள் நுழைவதற்கான சோதனையை தவிர்க்க முயற்சித்த அந்நிய நாட்டினரை குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாட்டு துணைத் தலைவர் சுரேஷ் நடராஜா இதனை கூறினார்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் விமானத்தில் இருந்து இறங்கியவுடன் உடனடியாக சோதனை முகப்பிடத்திற்கு சென்றிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் ஸ்டார்பக்ஸில் இருந்தனர். ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி கூட்டமாக அமர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த விமானம், விசா ஆகியவை சரிபார்க்கப்பட்டது.

அவர்களை மலேசியாவிற்கு கொண்டு வர முகவர்களுக்காக காத்திருப்பதாக நம்பப்படுகிறது.

சிலர் அந்த பகுதியில் பல நாட்களாக இருப்பதாகவும், குறிப்பிட்ட இடத்துக்குப் புறப்படவிருக்கும் பயணிகளைப் போல் நடிக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

சோதனைகளுக்கு பிறகு அவர்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset