நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா: கண்ணீர் மல்க அஞ்சலி

சென்னை:

அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை (அக். 17ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் சசிகலா.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். சிறைக்கு செல்லும் முன், ஜெயலலிதா சமாதியில் சபதமொன்றை எடுத்திருந்தார். 

பின் சிறையிலிருந்து வெளிவந்த பின் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அறிவித்த சசிகலா, பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாளர்களிடம் தொலைபேசியில் பேசி வந்தார்.

VK-Sasikala-pays-her-respect-to-Jayalalitha-in-her-memorial-place

இந்நிலையில் இன்று பல ஆண்டுகள் கழித்து நினைவிடத்தில் கண்ணீருடன் மரியாதை செலுத்தினார் அவர். இதை தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் சென்று அவரது சிலைக்கு சசிகலா மரியாதை செலுத்துகிறார். முன்னதாக தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என்று அவர் விண்ணப்பித்திருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset