செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருவள்ளுவர் நாள் விருதுகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்
சென்னை:
தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு, தமிழக அரசு வாயிலாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜன.16) காலை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் விருது பேராசிரியர் சத்தியவேல் முருகனாருக்கும், ஈ.வெ.ரா., விருது வழக்குரைஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வனுக்கும், அண்ணாதுரை விருது அமைச்சர் துரைமுருகனுக்கும், காமராஜர் விருது - எழுத்தாளர் இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், திரு.வி.க., விருது - முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவுக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பேராசிரியர் செல்லப்பாவுக்கும், கலைஞர் கருணாநிதி விருது எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட விடுதலை விரும்பி ஆகியோருக்கும் வழங்கி ஸ்டாலின் கௌரவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 15, 2026, 10:35 pm
தமிழகத்தில் இன்றிரவும் நாளையும் மழைக்கான வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
January 15, 2026, 8:21 am
மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு: 1,000 காளைகள் பங்கேற்க ஏற்பாடு
January 14, 2026, 10:11 pm
பூ வாசம் மணக்கட்டும், புத்தெழுச்சி பரவட்டும்: மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
January 13, 2026, 3:57 pm
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
January 13, 2026, 8:59 am
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் நீக்கம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை
January 11, 2026, 5:52 pm
சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
January 10, 2026, 1:20 pm
