நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பூ வாசம் மணக்கட்டும், புத்தெழுச்சி பரவட்டும்: மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரியின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

சென்னை:

இயற்கையின் பேரின்பத்தை மனிதர்களுக்கு உணர்த்தும் வகையில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையோடு தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் தமிழர் கலாச்சாரத்தின் தனித்தன்மையை நாட்டுக்கு உணர்த்துகின்றன.

உலகம் எங்கும் பரவி வாழும் தமிழர்களை கலாச்சார - பண்பாட்டு ரீதியாக இணைக்கும் ஒரே திருநாளாக பொங்கல் மட்டுமே இருக்கிறது.

பனி கொட்டும் பருவ காலத்தில் தமிழர் நிலமெங்கும் பச்சைப் பசேலென நெற்கதிர்கள் அசைந்தாடி இத் திருநாளை வரவேற்கின்றன.

இக் கண்கொள்ளாக் காட்சிகளின் வழியாக அறுவடை லாபத்தின் மகிழ்ச்சியை பொங்கல் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

முற்காலத்தில் இருந்தது போல் சாதி - மத- சடங்குகளற்ற பசுமைத் திருநாளாகவும் - சமத்துவ பொங்கலாகவும் இத் திருநாள் மாறி வருகிறது.

தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் குடியேறும் சகல மக்களும் பொங்கல் திருவிழாவில் பங்கேற்பது பொங்கல் திருவிழாவின் நோக்கத்தை அர்த்தப்படுத்துவதாக இருக்கிறது.

இத்திருநாளில் தமிழர் மனையெங்கும் பூவாசம் மணக்கட்டும்!
புத்தெழுச்சி பரவட்டும்! 
என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

இத்திருநாளில் தமிழர் ஒற்றுமை வளரவும் இயற்கை விவசாயமும்,  நீராதாரங்களும் பாதுகாக்கப்படவும் உறுதி ஏற்போம் !

இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset