செய்திகள் தமிழ் தொடர்புகள்
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் நீக்கம்: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கை
சென்னை:
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை பாமகவில் இருந்து நீக்கியுள்ளதாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்கிறது. இதனால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
பாமகவில் உள்ள 5 எம்எல்ஏக்களில் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாகவும், வெங்கடேஸ்வரன், எஸ்.சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
கட்சியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஜி.கே.மணி. இரா.அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கினார்.
இந்நிலையில், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று ராமதாஸ் பாமக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கை:
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட எம்எல்ஏக்களிடம் பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு கடந்த ஜூலை 20-ஆம் தேதி அனுப்பட்ட கடிதத்துக்கு இதுவரை அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், எம்எல்ஏக்கள் சி.சிவக்குமார், எஸ்.சதாசிவம், எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஜன.12 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள்.
பாமகவினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சி தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 13, 2026, 3:57 pm
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
January 11, 2026, 5:52 pm
சுற்றுலா பயணிகளுக்காக சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
January 10, 2026, 1:20 pm
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால் விரைவு ரயில்கள் நிறுத்தம்
January 9, 2026, 5:35 pm
இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரிய வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி
January 9, 2026, 1:38 pm
தமிழகத்தில் இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன
January 7, 2026, 8:17 pm
பாமக சார்பில் அன்புமணி கூட்டணி பேச்சில் ஈடுபடுவது சட்ட விரோதம்: ராமதாஸ் கடும் கண்டனம்
January 7, 2026, 11:10 am
சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு
January 4, 2026, 6:03 pm
தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்: செங்கோட்டையன் பேட்டி
January 4, 2026, 4:05 pm
