நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

431 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: ஆஸ்திரேலியாவில் மலேசிய பிரஜை கைது

கோலாலம்பூர்:

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மலேசிய பிரஜை ஒருவரை ஆஸ்திரேலிய காவல்துறை கைது செய்துள்ளது. அவர் சுமார் 431 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை ஆஸ்திரேலியாவில் இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதான் ஆஸ்திரேலிய காவல்துறையால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் மிக விலைமதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது. கைதான மலேசியரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நேற்று வெள்ளிக்கிழமையன்று கப்பல் மூலம் ஆஸ்திரேலியா வந்தடைந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டைல்ஸ் உள்ளிட்ட பொருள்களுடன் அந்தப் போதைப் பொருளும் அனுப்பப்பட்டிருந்தது என்றும், மெல்பெர்ன் நகரில் உள்ள முகவரி குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தங்கள் நாட்டில் உள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அந்த நபரைப் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்றும், மலேசிய காவல்துறையிடம் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை கூறியுள்ளது.

"இந்த குற்றச்செயலின் பின்னணியில் உள்ள கும்பலைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. இத்தகைய குற்றங்கள் மூலம் அந்தக் கும்பல் பல மில்லியன் டாலர்களை சம்பாதிப்பதுடன் இரு நாடுகளின் குடிமக்களுக்கும் கேடு விளைவிக்கிறது.

"இது தொடர்பாக ஆஸ்திரேலிய, மலேசிய காவல்துறைகள் இணைந்து செயல்படும். கப்பல் மூலம் தற்போது வந்திறங்கிய ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றாமல் போயிருந்தால் 225 மனித உயிர்களை இழக்க நேரிட்டிருக்கும்," என்று ஆஸ்திரேலிய கூட்டரசு காவல்துறையின் தெற்கு பிரிவு ஆணையர் கிரிஸ்ஸி பேரட் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு இரண்டு கிலோ ஹெராயின் பயன்பாடு காரணமாக ஒருவர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset