நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாடாளுமன்ற வளாகத்தில் மோடி, அதானி வேடமிட்டு எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: 

அதானி லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடக்கி உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் கார்கே உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். 

அப்போது மோடி, அதானி கூட்டு, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அந்த ஆர்ப்பாட்டத்தில் ேமாடி, அதானி வேடமிட்ட எம்பிக்களிடம் ராகுல்காந்தி பேட்டி எடுத்தார். அதானி முகமூடி அணிந்த எம்பியிடம்,’ நாடாளுமன்றம் செயல்பட ஏன் அனுமதிக்கவில்லை?’ என்று ராகுல் கேட்டார்.

அதற்கு அவர்,’ அமித்ஷாவிடம் கேட்க வேண்டும். அவரை இங்கே காணவில்லை’ என்றார். இதை தொடர்ந்து உங்கள் இருவருக்கும்(மோடி, அதானி) இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது? என்று கேட்டார். 

அதற்கு அந்த எம்பிக்கள்’ நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்’ என்று பதில் அளித்தார்கள். மேலும் அதானி முகமூடி அணிந்த எம்பி, மோடி முகமூடி அணிந்த எம்பியை காட்டிக் கூறுகையில்,’ நான் என்ன சொன்னாலும், விரும்பியதை அவர்(மோடி) செய்கிறார். அது விமான நிலையமாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி’ என்றார்.

அப்போது ராகுல்,’ மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்?’ என்று கேள்வி எழுப்ப, அதற்கு அதானி வேடமிட்ட எம்பி,’ இந்த நாட்களில் இவர் டென்ஷனில் இருக்கிறார்’ என்று கூறினார். அதை தொடர்ந்து,’ உங்கள் அடுத்த திட்டம் என்ன, இப்போது என்ன வாங்க முடிவு செய்து இருக்கிறீர்கள்’ என்று ராகுல் கேட்டதற்கு, அதானி முகமூடி அணிந்திருந்த காங்கிரஸ் எம்.பி., ‘நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, இன்று மாலை ஒரு சந்திப்பு உள்ளது’ என்றார்.

இதில், சப்தகிரி சங்கர் உலாகா பிரதமர் மோடி முகமூடியையும், மாணிக்கம் தாகூர் அதானி முகமூடியையும் அணிந்திருந்தனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset