நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஷாரூக்கானுடன் ஆர்யன் சிறையில் இருந்தபடி பேச்சு

மும்பை:

போதைப் பொருள் வழக்கில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்,

சிறையிலிருந்தபடி தனது பெற்றோருடன் காணொலி அழைப்பு (விடியோ கால்) வழியாக பேசியதாக காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
மேலும், தந்தையிடமிருந்து பண அஞ்சல் (மணி}ஆர்டர்) மூலம் வந்த ரூ. 4,500யும் ஆர்யன் கான் பெற்றுக் கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக ஆர்யன் கான் இம் மாதம் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Aryan Khan Bail Hearing LIVE Updates: Shah Rukh's Son 'Surviving on  Biscuits' from Jail Canteen; Court to Decide in Some Time

அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தமேச்சா, நூபுர் சட்டோச்சா, மோகக் ஜெய்ஸ்வால் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க அவர்களைக் கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "விசாரணையில் ஆர்யன் கான் போதைப் பொருள் வைத்திருந்ததும் பயன்படுத்தியதும் உறுதியாகியுள்ளது. சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்குத் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது. செல்வாக்குள்ள அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், ஆதாரங்களை அழிக்கவும் சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' என்று பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset