நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விவசாயிகள் போராட்டத்தில் சீக்கியர் கொடூர கொலை

புது டெல்லி:

தில்லி - ஹரியாணா எல்லை அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் மணிக்கட்டுகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒருவரின் சடலம் போலீஸாரின் தடுப்பு வேலியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஹரியாணா மாநிலம்  போலீஸார் கூறியதாவது:
கடந்த ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியின் சிங்கு, டிக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் 10 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தில்லி - ஹரியாணா எல்லைக்கு அருகில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் சிங்குவின் குண்ட்லி பகுதியில் ஆண் சடலம் இருப்பதாகக் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

Man found murdered near farmers' protest site at Singhu; BJP targets Tikait  - The Week

அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாரின் தடுப்பு வேலியில் தொங்கவிடப்பட்டிருந்த சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

விசாரணையில் கொல்லப்பட்ட நபர் பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் பகுதியைச் சேர்ந்த லக்பீர் சிங் (35) என்பது தெரியவந்தது.

சீக்கிய மதத்தின் புனித நூலான சர்ப்லோ கிரந்தத்தை லக்பீர் சிங் அவமதிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மதத்தின் நிஹாங் பிரிவைச் சேர்ந்த சிலர் லக்பீர் சிங்கை கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. அதனை அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset