நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியானது: தீர்ப்பாயம் உத்தரவு

புது டெல்லி:

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது சரியானதுதான் என்று  தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருவதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை ஆய்வு செய்ய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டது. இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ, பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம், ஈழம் அமைவதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபடுவதையோ அந்த இயக்கம் கைவிடவில்லை என தீர்ப்பாயத்திடம் ஒன்றிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக  தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset