செய்திகள் கலைகள்
மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர் வெளியானது
சென்னை:
ஹாலிவுட் திரைப்படமான மார்டல் காம்பட் இரண்டாம் பாகத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
மார்டல் காம்பட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது
மார்டல் காம்பட் என்பது ஒருவகையான விடியோ கேம் விளையாட்டு ஆகும். இது 1992-ல் தொடங்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இந்தத் தொடரில் அறிமுகமாகியுள்ளன.
இதனை மையமாக வைத்து உருவான மார்டல் காம்பட் முதல் பாகம் கடந்த 2021-ல் வெளியானது.
பட்ஜெட்டை விட கூடுதலாக லாபம் வந்தாலும் மிகப்பெரிய வெற்றியப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்தமுறை அந்தக் குறைகள் நீக்கப்பட்டு, அதிக மக்களைச் சென்றடையும் வகையில் புரோமோஷன் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கதையின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சைமன் மெக்குயிட் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ஜானி கேஜ் கதாபாத்திரத்தில் கார்ல் உர்பன் நடிக்க கிட்டானா கதாபாத்திரத்தில் அடிலைன் ருடால்ப் நடித்திருக்கிறார்.
வார்னர் ப்ரூஸ் வெளியிடும் இந்தப் படம் வரும் மே 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியாகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் TOXIC RELATIONSHIP குறித்த வெளிப்படையான பேச்சு
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
