
செய்திகள் விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். 2021 கோப்பையை வென்றது
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டூ பிளெசிஸ் முதலில் நிதானமாக ஆடினர். பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. கெய்க்வாட் 32 ரன்கள் சேர்த்த நிலையில், சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.
கொல்கத்தா பந்து வீச்சை வெளுத்து வாங்கிய டூ பிளெசிஸ், 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய உத்தப்பா, தன் பங்கிற்கு 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலியும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். 86 ரன்கள் குவித்த டூ பிளெசிஸ் கடைசி பந்தில் அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் குவித்தது. மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும், சுப்மன் கில் 51 ரன்களும் அடித்ததோடு சரி.
பின்னால் வந்த ஆட்டக்காரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கொல்கத்தா அணி இழந்து தோல்வி அடைந்தது.
சி.எஸ்.கே அணி நான்காவது முறையாக கோப்பையை வென்றது.
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am