நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மகாராஷ்டிர அதிகார போட்டி முடிவுக்கு வந்தது: முதல்வர் பட்னவீஸ், 2 துணை முதல்வர்கள் பதவியேற்பு

மும்பை:

மகாராஷ்டிரத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த அதிகார போட்டி முடிவுக்கு வந்து முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னவீஸ், துணை முதல்வர்களாக சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவார் ஆகியோர் பதவியேற்றனர்.

மூவருக்கும் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.

இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சிவசேனை கட்சியை உடைத்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த ஷிண்டே, மீண்டும் முதல்வர் பதவியை கேட்டு நிர்பந்தித்தார்.

இதனால் தேர்தல் முடிந்த பின்னரும் சுமார் 15 நாள்கள் இழுபறி நீடித்து வந்தது. பின்னர் இரண்டரை ஆண்டுகால முதல்வர், மகனுக்கு துணை முதல்வர் என பல்வேறு கோரிக்கைகளை ஷிண்டே வைத்ததால் ஆட்சி அமைப்பதில் சிக்கில் நீடித்தது. இதற்கு எதற்குமே பாஜக சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக சார்பாக முதல்வராக பட்னவீஸ், கூட்டணி கட்சிகளான இரு துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோர் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset