நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா:

திரிபுராவில் வங்கதேச துணை தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய தூதர் பிரணாய் வர்மாவை அழைத்து அந்த நாடு கண்டனம் தெரிவித்தது.

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில்  ஹிந்து மதத் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து அகர்தலாவில் ஏராளமான ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அங்குள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்காவில் உள்ள இந்திய தூதர் பிரணாய் வர்மாவை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனத்தை பதிவு செய்தது.

வங்கதேச சட்ட விவகாரங்கள் ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்தத் தாக்குதல் இந்தியாவின் தோல்வியை குறிக்கிறது. இந்தியாவுடன் நல்லுறவை பேண தேர்தல்களின்றி ஆட்சியில் அமரும் ஷேக் ஹசீனாவின் அரசு தற்போது வங்கதேசத்தில் இல்லை என்பதை இந்தியா உணர வேண்டும்.

தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் வங்கதேச தேசியக் கொடி எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் "ஹிந்து சங்கர்ஷ் சமிதி' என்ற அமைப்பு உள்ளது என குறிப்பிட்டார்.
பாதுகாப்பு கருதி அகர்தலாவில் தூதரக, விசா சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வங்கதேச துணை தூதரகம் அறிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset