நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வாங்கி வந்த உணவு பிடிக்கவில்லை: தந்தையைக் கொன்ற மகன் 

ஜகார்த்தா:

கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள பஜு பொனோரோகோ கிராமத்தில் வாங்கி வந்த உணவு பிடிக்காததால் மகன் தந்தையைக் கொன்றுள்ளான். 

கொலை செய்யப்பட்ட தந்தை வாங்கி வந்த உணவு மகனின்  விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லாத போது அவன் தனது தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படுவதாகப் பொனோரோகோ மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் AKP Rudi Hidayanto தெரிவித்தார்.

அந்தச் சந்தேகத்திற்குரிய மகன்  உணர்ச்சிவசப்பட்டு சொந்த தந்தையைக் கொலை செய்துள்ளான். 

67 வயதான போனாமின் என்று அடையாளம் காணப்பட்ட ஆடவரை மகன் ரிடோ கொலை செய்துள்ளான். 

கொலையுண்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லப்பட்ட நிலையில், சந்தேக நபரான மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். 

- நந்தினி ரவி & அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset